ஆப்நகரம்

Samantha: மீண்டும் சிக்கலில் சமந்தா: வருத்தத்தில் ரசிகர்கள்.!

சமந்தா நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராகவுள்ள 'சாகுந்தலம்' படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 7 Feb 2023, 6:41 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. அண்மையில் வெளியான 'யசோதா' படத்தினை தொடர்ந்து இந்தப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவித்திருந்த 'சாகுந்தலம்' படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளி போயுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil Shaakuntalam
Shaakuntalam


சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கடந்த வருடம் மனம் ஒத்து பிரிவதாக தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர். நாகர்ஜுனாவுடனான பிரிவிற்கு பின்னர் படங்களில் நடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் நடிகை சமந்தா திடீரென மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏறபடுத்தியது. இந்த நோயிலிருந்து மீண்டு வருவது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா, வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே நான் போராடிக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் மனம் தளரமாட்டேன் என உருக்கமாகவும் தன்னம்பிக்கையுடனும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குணா டீம் ஒர்க்ஸ் தயாரிப்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் விநியோகம் செய்யும் சாகுந்தலம் படத்தில் சமந்தா டைட்டில் ரோலில் நடித்துள்ளார். இதில் தேவ் மோகன் மன்னர் துஷ்யந்தாவாகவும், அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளனர். பான்-இந்தியத் திரைப்படமாக 3டியில் உருவாகியுள்ளது 'சாகுந்தலம்'.

Chiyaan Vikram: போடு வெடிய.. விரைவில் ரிலீசாகும் 'துருவ நட்சத்திரம்': தாறுமாறு அப்டேட்.!

கடந்த வருடம் நவம்பர் மாதமே வெளியாக இருந்த 'சாகுந்தலம்' படம் பிப்ரவரி 17 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, சாகுந்தலம் படத்தின் திரையரங்கு வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Thalapathy Vijay: மீண்டும் இணையும் 'வாரிசு' கூட்டணி: பதறும் தளபதி ரசிகர்கள்.!

இது குறித்து தயாரிப்பு தரப்பு, "பிப்ரவரி 17-ஆம் தேதி சாகுந்தலத்தை எங்களால் வெளியிட முடியாது என்பதை அன்பான பார்வையாளர்களுக்கு வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். புதிய வெளியீட்டுத் தேதியை நாங்கள் பின்னர் அறிவிப்போம். உங்களின் தொடர் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளது. 'சாகுந்தலம்' பட ரிலீஸ் தொடர்ந்து தள்ளி போவதால் சமந்தா ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்