ஆப்நகரம்

வெளியான சமந்தாவின் ‘யு டர்ன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘யு டர்ன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 23 Jul 2018, 3:58 pm
சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘யு டர்ன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil u turn


கன்னடத்தில் வெளியான த்ரில்லர் படம் ‘யு டர்ன்’. இந்தப் படத்தை பவன் குமார் இயக்கி, தயாரித்திருந்தார். இந்தப் படம் ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிரதான நடிகையாக நடித்திருந்தார். மேலும் படத்தில் திலிப் ராஜ் மற்றும் ராதிகா சேத்தன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்தப் படம் வியாபார ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

கன்னட ‘யு டர்ன்’ படம், மலையாளத்தில் ‘கேர்ஃபுல்’ என்ற பெயரில் ரீமேக்காகி வெளியானது. இந்தப் படத்தில் சந்த்யா ராஜு, விஜய் பாபு, பார்வதி நம்பியார் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை வி.கே.பிரகாஷ் இயக்கியிருந்தார்.

இந்நிலையில், ‘யு டர்ன்’ தமிழ் மற்றும் தெலுங்கிலும் உருவாகி வருகிறது. இந்த இரு மொழி படங்களையும் பவன்குமார் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் நாயகியாக சமந்தா நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்