ஆப்நகரம்

ஆணவ கொலையை மையமாக வைத்து உருவான ‘பற’ பட டிரைலர்

ஆணவ கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது, சமுத்திர கனி நடிக்கும் ‘பற’ திரைப்படம்.

Samayam Tamil 14 Apr 2019, 11:35 am
பற படத்தின் முக்கிய கருவாக ஆணவ கொலையை மையமாக வைத்தும், சமூக பிரச்னைகளை சுட்டிக் காட்டியும் உருவாகி வருகின்றது.

கீரா இயக்கும் இந்த படத்தில் சமுத்திரகனி, சாந்தினி தமிழரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு சினேகன் பாடல் எழுதி உள்ளார். எம்.எஸ் ஸ்ரீகாந்த் இசை அமைத்துள்ளார்.

முன்னதாக சமுத்திரகனி நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியதோடு, சாட்டை, அப்பா உள்ளிட்ட பல சமூக கருத்துக்கொண்ட படங்களில் நடித்துள்ளார்.

அதோடு பல சிறந்த கதை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்