ஆப்நகரம்

சமுத்திரக்கனி படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு!

சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள ‘தொண்டன்’ படத்துக்கு அரசு கேளிக்கை வரி விலக்கு அளித்துள்ளது.

TNN 23 May 2017, 9:02 pm
சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள ‘தொண்டன்’ படத்துக்கு அரசு கேளிக்கை வரி விலக்கு அளித்துள்ளது.
Samayam Tamil samuthirakanis new film gets tax soap
சமுத்திரக்கனி படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு!


சமுத்திக்கனி இயக்கி நடித்துள்ள படம் ‘தொண்டன்’. இந்தப் படத்தில் விக்ராந்த், சுனைனா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை மணிகண்டன் தயாரித்துள்ளார்.

‘தொண்டன்’ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்தப் படம் இந்த மாதம் 26ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் ‘தொண்டன்’ படத்துக்கு தமிழக அரசு வரிச்சலுகை அளித்துள்ளது. கேளிக்கை வரி விலக்கு அளிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Tamilnadu Govt gives tax soap for Samuthirakani’s new film.

அடுத்த செய்தி

டிரெண்டிங்