ஆப்நகரம்

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார், ஜெயம் ரவி

சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் சசிகுமார் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

TOI Contributor 4 May 2016, 7:18 pm
சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் சசிகுமார் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
Samayam Tamil samuthra kanni directs sasikumar jeyam ravi
சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார், ஜெயம் ரவி


நடிப்புக்கு வழிமாறிய இயக்குனர்களில் சமுத்திரகனி மட்டுமே இயக்குனராகவும் தாக்குப் பிடிக்கிறார். தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டே படங்கள் இயக்கவும் செய்கிறார் சமுத்திரகனி. ‘விசாரணை’, ‘வெற்றிவேல்’ என படங்களில் நடித்துக் கொண்டே, ‘அப்பா’ என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

இந்தப் படம் அவரது நடிப்பில் வெளியான ‘சாட்டை’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு படங்களை அவர் இயக்க உள்ளார். ஒரு படத்தில் சமுத்திரகனியின் நண்பர் நடிகர் சசிகுமார் நடிக்கிறார். இன்னொரு படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். இந்தத் தகவலை சமுத்திரகனியே வெளியிட்டிருப்பது முக்கியமானது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்