ஆப்நகரம்

இது நியாயமே இல்லை, 'வாட் தி ஃப...': பிக் பாஸை விளாசிய தர்ஷனின் காதலி

பிக் பாஸ் போட்டியாளர்களை செய்ய வைத்த ஒரு காரியத்தை பார்த்து தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி கொந்தளித்துள்ளார்.

Samayam Tamil 24 Sep 2019, 12:04 pm
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை பச்சை மிளகாய் சாப்பிட வைத்து வேடிக்கை காட்டியுள்ளனர். சக போட்டியாளர்களை காப்பாற்ற பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும் என்று பிக் பாஸ் கூறியதை உண்மை என்று நினைத்து போட்டியாளர்கள் கஷ்டப்பட்டனர்.
Samayam Tamil sanam shetty


ஷெரின் மற்றும் சாண்டியை காப்பாற்ற தர்ஷன் இரண்டு பச்சை மிளகாய்களை சாப்பிட்டார். அதை பார்த்த அவரின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி கொந்தளித்துவிட்டார்.

View this post on Instagram WTF !! Its going to make him very sick!!! Come on Bigboss..really??? Not fair at all !!! I cant watch this #bigboss3 #unfairgames A post shared by (Only Official Page) (@sam.sanam.shetty) on Sep 23, 2019 at 6:59am PDT

பச்சை மிளகாய் சேட்டை பற்றி சனம் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,

தர்ஷனுக்கு உடம்புக்கு முடியாமல் போகப் போகிறது. என்ன பிக் பாஸ், இதெல்லாம்?. இது நியாயமே இல்லை. என்னால் இதை பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஷெரினை காப்பாற்ற பச்சை மிளகாய் சாப்பிட்ட தர்ஷன்: நடக்கட்டும், நடக்கட்டும்

அதை பார்த்த நெட்டிசன்களோ, சனம் ஷெட்டிக்கு தான் தர்ஷன் மீது எவ்வளவு பாசம் என்று தெரிவித்துள்ளனர். சிலரோ, தர்ஷன் ஷெரினுக்காக பச்சை மிளகாய் சாப்பிட்டதை தான் சனம் ஷெட்டியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கலாய்த்துள்ளனர்.

தர்ஷனும், ஷெரினும் காதலிப்பதாக பார்வையாளர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஷெரின் குடும்பத்தார் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தபோது கூட தர்ஷனிடம் மிகவும் பாசமாக இருந்தார்கள். அதை பார்த்த பார்வையாளர்களோ, விட்டால் ஷெரினின் அம்மா தர்ஷனை உடனே வீட்டிற்கு அழைத்துச் சென்று மாப்பிள்ளை ஆக்கிக் கொள்வார் போன்று என்றனர்.

ஒய் பிளட்?... சேம் பிளட்: விழுந்து விழுந்து சிரிக்கும் பிக் பாஸ் பார்வையாளர்கள்

நானும், ஷெரினும் காதலர்கள் இல்லை, நண்பர்கள் மட்டுமே என்று தர்ஷன் கூறியதை நம்ப யாரும் தயாராக இல்லை. இருந்தாலும் பச்சை மிளகாய் டாஸ்க் டூ மச் பிக் பாஸ். போட்டியாளர்கள் பாவம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்