ஆப்நகரம்

‘சண்டக்கோழி- 2’ இரண்டாயிரம் தியேட்டர்களில் ரிலீஸ்: நடிகர் விஷால்!

விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சண்டக்கோழி 2’ படம் 2 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்..

Samayam Tamil 25 Sep 2018, 4:05 pm
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சண்டக்கோழி 2’. இந்நிலையில் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்தப் படம் ஆயுத பூஜைக்கு வெளிவருவதாகவும், தென் மாநிலங்களில் 2 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்பட இருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்தார்.
Samayam Tamil sandakoli


விழாவில் பேசிய நடிகர் விஷால், ‘சண்டக்கோழி’ படம் எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல.அது விஜய் மற்றும் சூர்யாவுக்காக எழுதப்பட்டது. கதையை கேட்டதும் அந்த கதையில் நான் நடிக்கின்றேன் என்று லிங்குசாமியிடம் கூறினேன். இந்தப் படத்தில் என்னை ஆக்ஷன் ஹீரோவாக நிறுத்திவிட்டார்.

அங்கே தொடங்கியதுதான் என் வாழ்கை.கனல் கண்ணன் மாஸ்டர் அந்த படத்தில் கொடுத்த தைரியம் ஆக்ஷன் ஹீரோவாக என்னை வெளிப்படுத்தியது. தற்போது ‘சண்டக்கோழி 2’ என்னுடைய 25வது படம். இந்தப் படம் அக்டோபர்-18ல் வெளிவரவுள்ளது.அதுவும் ஆயுத பூஜை அன்று. 2 ஆயிரம் பிரிண்ட் போடப்படவுள்ளது’’ என்றார் நடிகர் விஷால்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்