ஆப்நகரம்

பிரபல நடிகையிடம் பிரா என்ன பிராண்ட்டுன்னு கேட்ட காமெடி நடிகர்!

பிரபல தமிழ் காமெடி நடிகர் ஒருவர், நடிகை சங்கீதா பட்டிடம், நீங்கள் என்ன பிராண்ட் பிரா போடுகிறீர்கள் என்று கேட்டு அவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

Samayam Tamil 1 Nov 2018, 6:17 pm
தற்போது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் உட்பட எல்லா சினிமா துறையிலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. தங்களுடன் பணியாற்றும் ஆண்களாலே அவர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் நடக்கின்றன.
Samayam Tamil sangeetha-bhat


கன்னடத்தில் பல ஹிட் படங்களில் நடித்தவர் சங்கீதா பட். தற்போதும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் பெயரை குறிப்பிடாமல் தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் காமெடி நடிகர் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

அதில், ‘‘நான் 2016ல் ஒரு தமிழ் காமெடி நடிகருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தேன். படத்தில் அவருடன் நான் உட்கார்ந்து பைக்கில் செல்வது போன்ற காட்சி இருந்தது. பைக்கை அவர் ஓட்டினார். நான் பின்னார் அமர்ந்திருந்தேன். பைக்கில் வேகமாக சென்றது. திடீரென பைக்கை நிறுத்தி, நீங்க எந்த பிராண்ட்ல பிரா போடுறீங்க என கூறி என்னிடம் ஆபாசமாக பேச ஆரம்பித்தார். அத்துடன் அவரும் நானும் நடிக்கும் சீன் முடிந்தது. இதையடுத்து மேலும் சில இயக்குனர்கள் எனக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுத்தனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்