ஆப்நகரம்

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் சந்தானத்தின் 'டிக்கிலோனா': விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'டிக்கிலோனா' படம் அடுத்த மாதம் 10 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாக உள்ளன

Samayam Tamil 17 Aug 2021, 12:37 pm
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக கலக்கி வந்தவர் சந்தானம். இவர் தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, சபாபதி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நீண்ட காலமாக காத்திருப்பில் இருக்கும் டிக்கிலோனா படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil Dikkiloona
Dikkiloona


சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான பாரீஸ் ஜெயராஜ் படம் சூப்பர் ஹிட்ட்டித்தது. A1 படத்தை இயக்கியிருந்த ஜான்சன் கே இந்த படத்தையும் இயக்கியிருந்தார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் ஏற்கனவே சந்தானம் நடித்து முடித்துள்ள சர்வர் சுந்தரம், டிக்கிலோனா போன்ற படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டிக்கிலோனா படத்தில் அவருக்கு ஜோடியாக அனைகா, ஷிரின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஹர்பஜன் சிங், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஆனந்தராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

சூர்யாவால் தாமதமாகும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு: அப்செட்டில் கமல்ஹாசன்!
சந்தானம் மூன்று விதமான கெட்டப்களில் இந்தப்படத்தில் நடித்துள்ளார். டைம் டிராவலை மையப்படுத்தி நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது 'டிக்கிலோனா' படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. 2027ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டுக்கு வந்து தனது கல்யாணத்தை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்துவதற்காக டைம் டிராவல் செய்வதை போல் 'டிக்கிலோனா' படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். அதன்படி ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது இந்தப்படம். மேலும் அடுத்த மாதம் 10 ஆம் தேதி விநாயக சதுர்த்தியை அன்று டிக்கிலோனா படம் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்