ஆப்நகரம்

சந்தானத்தின் அடுத்த காமெடி விருந்து: இணையத்தை கலக்கும் 'சபாபதி' டிரெய்லர்!

நவம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள சந்தானத்தின் சபாபதி டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 11 Nov 2021, 10:38 am
நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கி முத்திரை பதித்து வரும் சந்தானம் நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள படம் ‘சபாபதி’. இந்தப்படத்தை ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிக்க, ஆர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil சபாபதி
சபாபதி


திக்கு வாயால் அவதிப்படும் வாலிபர் கதாபாத்திரத்தில் முதல் முறையாக இப்படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்தப்படத்தில் தந்தை-மகனுக்கிடையேயான உறவு குறித்து நகைச்சுவையுடன் பேசப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தானத்தின் நடிப்பு இந்தப்படத்தில் மிகவும் பேசப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தப்படம் ஓடிடியில் வெளியாகலாம் என செய்திகள் பரவியது. அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர் படக்குழுவினர். அதில், படத்தின் ட்ரெய்லர் 10-ஆம் தேதி நாளை வெளியாகும் என்றும் நவம்பர் 19 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தனர்.
'எதற்கும் துணிந்தவன்' அப்டேட் வெளியிட்ட பாண்டிராஜ்: உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!
விதி சபாபதியாக நடித்துள்ள சந்தானத்தின் வாழ்வில் எப்படி எல்லாம் விளையாடுகிறது என்பதை சொல்லும் விதமாக படம் உருவாகியுள்ளது என்பது டிரைலரிலே தெரிகிறது. வழக்கமான சந்தானத்தின் கவுண்டர் காமெடிகளும் டிரைலரில் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களுக்கு படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


எம் எஸ் பாஸ்கர், பிரீதி வர்மா, சாயாஜி ஷிண்டே, சுவாமிநாதன், ‘காமெடி பஜார்’ மாறன் உள்ளிட்டோர் ‘சபாபதி’ படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப்படத்தில் ‘விஜய் டிவி’ புகழும் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார். சாம் சி எஸ்இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்