ஆப்நகரம்

அஸ்னா ஜவேரியை கண்டு கொள்ளாத சந்தானம்!

அஸ்னா ஜவேரிக்கு சந்தானம் தன் படங்களில் வாய்ப்பு தரவில்லை என்ற வருத்தத்தில் இருந்து வருகிறாராம்.

TOI Contributor 18 Aug 2017, 3:23 pm
அஸ்னா ஜவேரிக்கு சந்தானம் தன் படங்களில் வாய்ப்பு தரவில்லை என்ற வருத்தத்தில் இருந்து வருகிறாராம்.
Samayam Tamil santhanam sidelined actress ashna javeri
அஸ்னா ஜவேரியை கண்டு கொள்ளாத சந்தானம்!


சந்தானம் ஹீரோவாக அறிமுகமான காலகட்டத்தில் அவருக்கு ஆஸ்தான ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை அஸ்னா ஜவேரி. அவருடன் இணைந்து இரண்டு மூன்று படங்களில் நடித்தார். தற்போது சந்தானம் தன்னை கழட்டி விட்டதாக நினைத்து சோகத்தில் இருந்து வருகிறார்.


நடிகை அஸ்னா ஜவேரி இப்போதைக்கு, ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘பிரம்மா டாட் காம்’ ஆகிய, இரண்டு படங்களில் மட்டும் நடித்து வருகிறார். ஆனால், இந்த இரண்டு படங்களுமே ரிலீசாவதில் தாமதமாகி வருகின்றன. பெரிதும் நம்பியிருந்த சந்தானமும், வெவ்வேறு புதுப்புது நடிகையரை, தன் படங்களுக்கு ஒப்பந்தம் செய்வதால், நடிகை அஸ்னா கவலை அடைந்துள்ளார். இதனால், சந்தானம் கண்டு கொள்ளாததால் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு, தன் புகைப்படங்களை அனுப்பி, வாய்ப்பு கேட்டு வருகிறார். ‘ஒரு சில முன்னணி ஹீரோக்களுடன் ஒரு படம் நடித்தாலே போதும்; அதற்கு பின், மூன்று ஆண்டுகளுக்கு உங்களை யாராலும் அசைக்க முடியாது’ என, சிலர், அவருக்கு ஐடியா கொடுத்திருப்பார்கள் போல, ஆகவே அஸ்னா முன்னணி நடிகர்கள் படங்களில் நடிப்பதற்கு, கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Santhanam sidelined actress Ashna Javeri

அடுத்த செய்தி

டிரெண்டிங்