ஆப்நகரம்

பாரிஸ் ஜெயராஜாக மாறிய சந்தானம்: 'அந்த' மனுஷனை கலாய்க்கிறாரோ?

ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்திற்கு பாரிஸ் ஜெயராஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.

Samayam Tamil 1 Dec 2020, 5:24 pm
சந்தான் தான் நடித்த ஏ1 படத்தை இயக்கிய ஜான்சனுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஏ1 படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்தார். ஏ1 படம் மூலம் தான் ஜான்சன் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil santhanam


இந்நிலையில் ஜான்சன், சந்தானம் மீண்டும் கூட்டணி சேரும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 1ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள். அறிவித்தபடி போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
படத்திற்கு பாரிஸ் ஜெயராஜ் என்று பெயர் வைத்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் மைக்குடன் சந்தானம் கெத்தாக போஸ் கொடுத்திருக்கிறார். போஸ்டரை பார்த்த ரசிகர்கள் சந்தானத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிலரோ, இது என்ன இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கலாய்ப்பது மாதிரியே இருக்கிறதே என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
நான் கடவுள், அவன் இவன் படம் புகழ் ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். காவியத் தலைவன் மற்றும் செம போத ஆகாதே படங்களில் நடித்த அனைகா சோதி இந்த படத்தில் நடிக்கிறார்.

படம் குறித்து ஜான்சன் முன்பு கூறியதாவது,

வயதாகும் மலேசிய டானிடம் இருந்து பவர் யாருக்கு கிடைக்கும் என்பது தான் கதை. சந்தானம் வட சென்னையை சேர்ந்த கேங்ஸ்டராக நடிக்கிறார். இந்த படத்திற்காக அவர் தன் உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். இளம் டானாக நடிக்க தயாராகி வருகிறார். நான் வட சென்னையை சேர்ந்தவன். அவருக்கு அந்த ஸ்லாங்கை நான் சொல்லிக் கொடுப்பேன் என்றார்.

ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்த பிஸ்கோத் படம் கடந்த மாதம் வெளியானது. படத்தை பார்த்தவர்கள் நிறைய எதிர்பார்த்து ஏமாந்ததாக தெரிவித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்