ஆப்நகரம்

இளைஞர்களால் தாக்கப்பட்டு ரத்த காயமடைந்த பிரபல நடிகை!

பிரபல நடிகை ரூபாலியும், அவரது மகனும் இளைஞர்கள் இருவரால் தாக்கப்பட்டு ரத்த காயமடைந்துள்ளனர்.

Samayam Tamil 7 Aug 2018, 4:42 pm
பிரபல நடிகை ரூபாலியும், அவரது மகனும் இளைஞர்கள் இருவரால் தாக்கப்பட்டு ரத்த காயமடைந்துள்ளனர்.
Samayam Tamil இளைஞர்களால் தாக்கப்பட்டு ரத்த காயமடைந்த பிரபல நடிகை!


பாலிவுட் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரூபாலி கங்குலி. இவர் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டுள்ளார். நேற்று நடிகை ரூபாலி மும்பையில் தனது காரில் ஐந்து வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னே சென்ற இளைஞர்கள் பைக் மீது அவர் கார் லேசாக மோதியது.

இதனால் கோபமடைந்த பைக்கில் வந்த இளைஞர்கள் பைக்கையும், ரூபாலியின் காரையும் நிறுத்தி, நடுரோட்டில் ரூபாலியின் கார் கண்ணாடியை உடைத்துவிட்ட, ரூபாலியையும், அவரது மகனையும் தாக்கி விட்டு தலைமறைவாகினர். இதில் ரூபாலிக்கும் அவரது மகனுக்கும் ரத்தக் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து நடிகை ரூபாலி ரத்தக் காயத்துடன் காவல்நிலையம் சென்று தன்னை தாக்கிய இளைஞர்கள் மீது புகார் கொடுத்தார். புகாரை பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாகியிருந்த இரண்டு இளைஞர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்