ஆப்நகரம்

‘லாலி லாலி ஆராரோ’ மூலம் ஹீரோவான சரண்ராஜின் வாரிசு!

நடிகர் சரண்ராஜின் மகன் தேஜ் சரண்ராஜ் ‘லாலி லாலி ஆராரோ’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.

TNN 5 Apr 2017, 5:05 pm
நடிகர் சரண்ராஜின் மகன் தேஜ் சரண்ராஜ் ‘லாலி லாலி ஆராரோ’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.
Samayam Tamil saranraj son tej saranjaj debut as a new movie
‘லாலி லாலி ஆராரோ’ மூலம் ஹீரோவான சரண்ராஜின் வாரிசு!


கோலிவுட்டில் வாரிசு நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பாரதிராஜா மகன் மனோஜ், கே.பாக்யராஜ் மகன் சாந்தனு, சத்யராஜ் மகன் சிபி என ஒரு பக்கம் ஹீரோக்களின் மகன்களுக்கு போட்டியாக நடிகைகள் மேனகா மகள் கீர்த்தி சுரேஷ், ராதா மகள்கள் கார்த்திகா, துளசி உள்ளிட்ட ஹீரோயின் வாரிசுகளும் என்ட்ரி தருகின்றனர்.

தமிழ் படங்களில் வில்லன், குணச்சித்ர வேடங்களில் நடித்திருப்பவர் நடிகர் சரண்ராஜ். அவரது மகன் தேஜ் சரண்ராஜ், ‘லாலி லாலி ஆராரோ’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கிறார். மேலும் படத்தில் மனோபாலா, லட்சுமிபிரியா, ஷினாஜ், கே.கே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படத்திற்கு நாகபூஷன் ஒளிப்பதிவு செய்கிறார். ராமகோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். படத்தை ஆறுபடையப்பன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை லிங்கன் ராஜாளி இயக்கி வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்