ஆப்நகரம்

கணவரை காப்பாற்ற கடைசி வரை போராடினார்: மீனா குறித்து பிரபல நடிகர் உருக்கம்.!

மீனாவின் குடும்பத்திற்கு நாங்கள் துணை நிற்போம் என தெரிவித்துள்ளார் நடிகர் சரத்குமார்.

Samayam Tamil 30 Jun 2022, 7:26 am
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு நைனிகா எனற மகளும் இருக்கிறார். இந்நிலையில் நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் காலமானார்.
Samayam Tamil Meena
Meena


புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிற போது உண்டாகக் கூடிய நோய் வித்யாசாகருக்கு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் அவருடைய வீட்டுக்கு அருகே நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட அலர்ஜி சுவாசப் பிரச்சனையாக மாறியுள்ளது. இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மீனாவின் கணவர் மறைவிற்கு ரஜினி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் சென்னை, பெசண்ட் நகர் மின் மயானத்தில் வித்யாசகரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரின் இறுதிச் சடங்குகளை மீனாவும், அவரது மகள் நைனிகாவும் செய்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களை மனம் கலங்க செய்துள்ளது.

முன்னதாக மீனாவின் கணவர் இறப்பு குறித்து சரத்குமார் கூறுகையில், 'உடல்நிலை சரி இல்லாமல் இருந்தார் என்பது எங்களுக்கு தெரியும். இருந்தாலும் எப்படியும் அவர் குணமடைந்துவிடுவார் என மீனாவிடம் நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து கூறி வந்தனர். அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் மீனா போராடினார்.

முதல் தென்னிந்திய நடிகர்.. சூர்யாவுக்கு கிடைத்துள்ள புதிய கெளரவம்..!

அவர் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் நாங்கள் எல்லோரும் இருந்தோம். ஆனால், அவர் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்ட உடனேயே நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். மீனாவை பொறுத்தவரை மிகப்பெரிய இழப்பு. மீனாவின் தந்தை இறந்த பிறகு, அவரது இடத்தில் இருந்து குடும்பத்தையே வித்யாசாகர் வழி நடத்தினார். அவர் இப்போது இல்லை என்பதை அறியும்போது சோகமாக உள்ளது.

அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர் என்றும் தங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தில் மீனா பயணிக்க வேண்டும். நாங்கள் அவர்களது குடும்பத்திற்கு துணை நிற்போம்' என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்