ஆப்நகரம்

சரத்குமாருக்கு கொரோனா, ஹைதராபாத்தில் சிகிச்சை

தன் கணவர் சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ராதிகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Dec 2020, 5:20 pm
கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு படப்பிடிப்புகளை துவங்கலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்த பிறகு ஷூட்டிங்கை துவங்கினார்கள். தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள சரத்குமார் ஹைதராபாத் சென்றார்.
Samayam Tamil sarath kumar


இந்நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வரலட்சுமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அப்பா சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று தெரிய வந்துள்ளது. அவர் தற்போது ஹைதராபாத்தில் இருக்கிறார். இது குறித்து அப்டேட் கொடுக்கிறேன்..நன்றி என்று தெரிவித்துள்ளார்.

சரத்குமார் பற்றி ராதிகா ட்வீட்டியிருப்பதாவது,
ஹைதராபாத்தில் இருக்கும் சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று தெரிய வந்திருக்கிறது. அவருக்கு கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் எதுவும் இல்லை. நல்ல மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். அவரில் உடல்நலம் குறித்து அப்பேட் கொடுக்கிறேன் என கூறியுள்ளார்.

ராதிகாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ,

கவலைப்பட வேண்டாம் ராதிமா. சரத்குமார் மிகவும் தைரியமானவர். அவருக்கு அறிகுறிகள் இல்லாதது நல்லது. அவர் நிச்சயம் விரைவில் குணமடைந்துவிடுவார். சரத் அப்பாவுக்காக நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம்.

இந்த வயசிலும் ஒர்க்அவுட் செய்து ஆரோக்கியமாக இருக்கும் அவரை கொரோனா ஒன்றும் செய்யாது என்று ஆறுதல் கூறியுள்ளனர்.

முன்னதாக ராதிகாவின் நண்பரும், நடிகருமான சிரஞ்சீவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொள்ள படக்குழுவினருக்கு பரிசோதனை செய்தபோது சிரஞ்சீவிக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. பாதிப்பு ஏற்பட்ட வேகத்திலேயே அவர் குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட தமன்னாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள், நடிகைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

வாரிசு ஹீரோவை அடுத்து பிரபல நடிகைக்கும் கொரோனா: ஷூட்டிங் பாதிப்பு

அடுத்த செய்தி

டிரெண்டிங்