ஆப்நகரம்

நடிகை ரெஜினாவுக்காக காத்திருக்கும் படக்குழு!

பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை ரெஜினாவுக்காக படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.

TOI Contributor 25 Apr 2017, 8:21 am
பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை ரெஜினாவுக்காக படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.
Samayam Tamil saravanan irukka bayamaen team wait for heroine regina cassandra for promotion
நடிகை ரெஜினாவுக்காக காத்திருக்கும் படக்குழு!


எழில் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகி ரெஜினா வருகைக்கு படக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
ரெட் ஜெய்ண்ட் மூவீஸ் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் மே 12ம் தேதி வெளிவர உள்ள படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. இதில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு தனிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது. இந்நிலையில் அதே மகிழ்ச்சியோடு படத்தின் புரோமஷனையும் செய்ய படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் படத்தின் நாயகி ரெஜினா தெலுங்கு படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாக கூறி விட்டாராம். இதனால் ரெஜினா வந்த பிறகு புரோமஷன் செய்துக்கொள்ளலாம் என அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறதாம் படக்குழு.

saravanan irukka bayamaen team wait for heroine regina cassandra for promotion

அடுத்த செய்தி

டிரெண்டிங்