ஆப்நகரம்

ஸ்லிம்மாக மாறிய ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் நடிகை!

‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்த நடிகை ரக்ஷிதா தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் மிகவும் ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார்.

Samayam Tamil 4 Apr 2019, 6:41 pm
முதன் முறையாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் நடித்த முதல் சீரியல் ‘பிரிவோம் சந்திப்போம்’. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
Samayam Tamil sara-meena


தமிழில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டி.வியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில ஒன்று ‘சரவணன் மீனாட்சி’. இந்த சீரியலில் மீனாட்சி கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகை ரக்ஷிதா. மேலும் மேலும் இவர் ‘உப்புகருவாடு’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் காமெடி நடிகர் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது ரக்ஷிதா தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் உறைந்து போய் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்