ஆப்நகரம்

சிவகார்த்திகேயன் படத்தில் சரவணன் மீனாட்சி தொடர் ஹீரோ அறிமுகம்!!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவுள்ள 2வது படத்தில் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் சரவணனாக நடித்த ரியோ ராஜ் அறிமுகமாகிறார்.

Samayam Tamil 25 Aug 2018, 4:43 pm
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவுள்ள 2வது படத்தில் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் சரவணனாக நடித்த ரியோ ராஜ் அறிமுகமாகிறார்.
Samayam Tamil சிவகார்த்திகேயன் படத்தில் ரியோ ராஜ் அறிமுகம்!!
சிவகார்த்திகேயன் படத்தில் ரியோ ராஜ் அறிமுகம்!!


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் சொந்தமாக படங்கள் தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். இவர் தயாரிப்பில் திரைக்கு வருவதற்கு தயாராக இருக்கும் திரைப்படம் கனா. இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல பாடகரும், நடிகருமான அருண் ராஜா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யாவுடன் நடிகர் சத்யராஜும் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பேசிய சிவகார்த்திகேயன், விரைவில் அடுத்த படம் தயாரிக்க இருப்பதாக அறிவித்து இருந்தார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியின் தொகுப்பாளர் மற்றும் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் சரவணனாக நடித்த ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்க இருப்பதை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. அதுகுறித்து டுவீட் செய்துள்ளது. அவருக்கு ஜோடி யார் என்ற விபரம் வரும் நாட்களில் தெரியவரும்.

இதற்கு ஏற்றார் போல் விஜய் டிவியில் வெளியாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரும் துரிதகதியில் முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்