ஆப்நகரம்

ரஜினி கூட எட்ட முடியாத உச்சத்தைத் தொட்ட தளபதி விஜய்!!

‘சர்கார்’ திரைப்படம், ரூ.70 கோடி விநியோகஸ்தர் ஷேர் பெற்றுத் தந்து சாதனைப் படைத்துள்ளது.

Samayam Tamil 24 Nov 2018, 12:51 pm
நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சர்கார்’ திரைப்படம், ரூ.70 கோடி விநியோகஸ்தர் ஷேர் பெற்றுத் தந்து சாதனைப் படைத்துள்ளது.
Samayam Tamil ரஜினி கூட எட்ட முடியாத உச்சத்தைத் தொட்ட தளபதி விஜய்!!
ரஜினி கூட எட்ட முடியாத உச்சத்தைத் தொட்ட தளபதி விஜய்!!


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்தது.

வெளியீட்டிற்கு முன் கதைத் திருட்டு பிரச்சனையைச் சந்தித்த இந்தத் திரைப்படம், வெளியீட்டிற்குப் பின் ஆளும் கட்சியின் எதிர்ப்பை சந்தித்தது. இதனால், இந்தப் படம் பல செய்தி தொலைக்காட்சிகளில் விவாதப் பொருளாக மாறியது.

கலவையான விமர்சனத்தைப் பெற்ற இந்தத் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதுவரை இப்படம் உலகம் முழுவதும் 240 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் தியேட்டர் ஷேர் போக, விநியோகஸ்தர் ஷேராக ரூ.70 கோடி கலெக்ட் செய்துள்ளது. இதுவரையின் மெர்சல் மற்றும் சர்கார் படங்கள் மட்டுமே இந்த சாதனையைப் படைத்துள்ளன. இதையடுத்து, ரஜினியின் எந்திரன் ரூ.62 கோடி விநியோகஸ்தர் ஷேர் கலெக்ட் செய்து, இரண்டாவது இடத்தில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்