ஆப்நகரம்

Sarkar Vs Tamilnadu Govt: ஏன் இந்த ஆர்ப்பாட்டம், கூச்சல் குழப்பம்: விஷால் கண்டனம்!!

சர்கார் படம் சென்சார் செய்யப்பட்டு, தற்போது திரையரங்குகளில் மக்கள் பார்த்து வரும் நிலையில் ஏன் இந்த ஆர்ப்பாட்டம், கூச்சல் என்று நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 9 Nov 2018, 2:05 pm
சர்கார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுக்கு நள்ளிரவில் போலீஸ் சென்றது ஏன்? என்று நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil விஷால் கண்டனம்
விஷால் கண்டனம்


சர்கார் திரைப்படம் தற்போது பலத்த சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சர்கார் படத்தின் வில்லிக்கு வைக்கப்பட்டு இருப்பதாகவும், ஜெயலலிதா ஆட்சியில் அவர் கொண்டு வந்த இலவச திட்டங்கள் மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சர்கார் படத்தில் இடம் பெற்று இருக்கும் அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். காட்சிகள் நீக்கப்படும் என்று தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுக்கு போலீசார் சென்றதாகவும். அவரை கைது செய்யவே சென்றதாகவும் செய்தி வெளியானது. ஆனால், இந்த செய்தியை போலீசார் மறுத்த நிலையில் இன்று முன் ஜாமீன் கோரி முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கு முன்னதாக அதிமுகவின் செயலை டுவிட்டர் பதிவு மூலம் விஷால் கண்டித்துள்ளார். ''ஏ.ஆர். முருகதாஸ் வீட்டில் எதற்கு போலீஸ். எதிர்பார்க்காத சம்பவங்கள் எதுவும் நடக்காது என்று நம்புகிறேன். சென்சார் செய்யப்பட்டு, மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் ஒரு படத்தை எதிர்த்து, ஏன் இந்த ஆர்ப்பாட்டமும், கூச்சல் குழப்பமும்'' என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்