ஆப்நகரம்

சசிகுமாரின் அடுத்தப்பட தலைப்பு அறிவிப்பு

இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் அடுத்தப் படத்திற்கு 'பலே வெள்ளையத்தேவா' என தலைப்பிட்டுள்ளனர்.

TNN 2 Nov 2016, 3:51 pm
சென்னை: இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் அடுத்தப் படத்திற்கு 'பலே வெள்ளையத்தேவா' என தலைப்பிட்டுள்ளனர்.
Samayam Tamil sasikumar next film titled balle vellaiya thevaa
சசிகுமாரின் அடுத்தப்பட தலைப்பு அறிவிப்பு


சசிகுமார் தயாரிப்பில் உருவாகவிருக்கும் 9வது படமான இப்படத்தை இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கவிருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடன இயக்குனர் ராஜு சுந்தரம் நடன அசைவுகளை வடிவமைப்பார் என சசிகுமார் தெரிவித்துள்ளார்.
#"பலே வெள்ளையத்தேவா"எங்களது கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் 9-வதாக தயாரிக்கும் படத்தின் தலைப்பு pic.twitter.com/ZsEV0Q3HlZ — M.Sasikumar (@SasikumarDir) November 2, 2016 பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான சங்கிலி முருகன் மற்றும் கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். சசிகுமார் நடிப்பில் இறுதியாக வெளியான 'கிடாரி' படத்திற்கு இசையமைத்த தர்புகா சிவா இந்தப் படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறார்.

அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பை துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், 'பலே வெள்ளையத்தேவா' படம் குறித்த கூடுதல் தகவல் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பபர்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்