ஆப்நகரம்

அர்விந்த்சாமி - த்ரிஷா நடிப்பில் சதுரங்க வேட்டை2 டீசர்...!

அர்விந்த்சாமி - த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் சதுரங்க வேட்டை2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

TNN 11 Aug 2017, 12:22 pm
சென்னை: அர்விந்த்சாமி - த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் சதுரங்க வேட்டை2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
Samayam Tamil sathuranka vettai 2 official teaser
அர்விந்த்சாமி - த்ரிஷா நடிப்பில் சதுரங்க வேட்டை2 டீசர்...!


கடந்த 2014ஆம் ஆண்டு வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சதுரங்க வேட்டை. நட்டி, இசா நாயர், பொன்வண்ணன் நடிப்பில் உருவான இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இதையடுத்து 2ஆம் பாகத்திற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கின. சலீம் படத்தை இயக்கிய நிர்மல்குமார் சதுரங்க வேட்டை தொடர்ச்சியை கையில் எடுத்தார்.

சதுரங்க வேட்டை 2 படத்தில் அர்விந்த் சாமி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ராதா ரவி, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை மனோபாலா தயாரிக்கிறார். அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார்.



இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Sathuranka Vettai 2 Official Teaser.

அடுத்த செய்தி

டிரெண்டிங்