ஆப்நகரம்

Sayesha Saigal :கன்னடத்தில் இணையும் நடிகை சாயிஷா!

பிரபல நடிகை சாயிஷா, தமிழ், தெலுங்கு, இந்தி படங்களை அடுத்து தற்போது கன்னட படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 27 Feb 2019, 5:50 pm
‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா சைகல். அதையடுத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘ஜுங்கா’ படத்திலும், ஆர்யாவுக்கு ஜோடியாக ‘கஜினிகாந்த்’ படத்திலும் நடித்துள்ளார். தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார்.
Samayam Tamil saysha


இந்நிலையில் இளம் நடிகை சாயிஷா நடிகர் ஆர்யாவை திருமணம் செய்யப்போகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. நீண்ட நாட்களாக நடிகர் ஆர்யாவுக்கு திருமணம் ஆகாமல் இருந்தது. தற்போது நடிகை சாயிஷா மூலம் இது நிறைவேறிவிட்டது.

நடிகை சாயிஷா தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் முதன் முறையாக கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்