ஆப்நகரம்

நடனப்பள்ளி தொடங்கும் ‘வனமகன்’ நடிகை!

‘வனமகன்’ நடிகை சாயிஷா, மும்பையில் நடனப்பள்ளி ஒன்றை தொடங்கவுள்ளார்.

Samayam Tamil 19 Jun 2018, 3:56 pm
‘வனமகன்’ நடிகை சாயிஷா, மும்பையில் நடனப்பள்ளி ஒன்றை தொடங்கவுள்ளார்.
Samayam Tamil saayshaseigal


நடிகை சாயிஷா சைகல், தமிழில் ‘வனமகன்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘ஜூங்கா’ படத்தில் நடித்துள்ளார். அத்துடன் கார்த்திக்கு ஜோடியாக ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும், மற்றும் ஆர்யாவுக்கு ஜோடியாக ‘கஜினிகாந்த்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சாயிஷா தமிழ் படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மற்ற நடிகைகள் போல இவருக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

நடிகை சாயிஷா நடனத்தை முறைப்படி கற்றவர். கஷ்டமான நடனமாக இருந்தால் எளிதாக ஆடி அசத்தி விடுவார். மேலும் முழுமையாக நடனம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க ஆசையுடன் உள்ளார். மும்பையில் சொந்தமாக நடனப் பள்ளி தொடங்க திட்டமிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்