ஆப்நகரம்

ஓரினச்சேர்க்கை ஆதரவு தீர்ப்புக்கு த்ரிஷா ஆதரவு

ஓரினச்சேர்க்கை உறவை குற்றம் என வரையறுக்கும் சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்து, டெல்லி உச்சநீதிமன்றம் ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 6 Sep 2018, 5:46 pm
ஓரினச்சேர்க்கை உறவை குற்றம் என வரையறுக்கும் சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்து, டெல்லி உச்சநீதிமன்றம் ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக அறிவித்துள்ளது.
Samayam Tamil trisha


இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் ஓரினச்சோ்க்கை அங்கீகரிக்கப்படாததால், அவை தற்போது வரை குற்றச் செயலாகவே கருதப்படுகிறது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு ஓரினச் சோ்க்கை குற்றச்செயல் என்று குறிப்பிட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்க முடியும்.

இந்த 377 பிரிவு சட்டத்தை நீக்கி, ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

த்ரிஷா வரவேற்பு:
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஓரினச் சேர்க்கையாளருக்கு இந்தியாவில் சம உரிமை வழங்கியது மகிழ்ச்சி என்பது போன்று பதிவிட்டுள்ளார்.


மேலும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இந்திய இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள, ஓரினச்சேர்க்கையாளுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்தியை, த்ரிஷா ரீடுவிட் செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்