ஆப்நகரம்

Aditi Shankar: நயன் இல்ல, அதிதி ஷங்கருக்கு பிடித்த நடிகை யார் தெரியுமா?

உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று அதிதி ஷங்கரிடம் கேட்டபோது பளிச்சென்று பதில் சொல்லிவிட்டார். அப்படி என்றால் அதிதியும் குத்தாட்டம் போடுவாரா என்கிறார்கள் ரசிகர்கள்.

Samayam Tamil 14 Aug 2022, 3:42 pm

ஹைலைட்ஸ்:

  • விருமனில் நடித்த அதிதி ஷங்கர்
  • அதிதியை கவர்ந்த நடிகை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil aditi shankar
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி, விருமன் படம் மூலம் நடிகையாகிவிட்டார். விருமன் படம் பார்த்தவர்கள் அதிதியின் நடிப்பை பாராட்டுகிறார்கள்.
முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த பொண்ணு தைரியமாக நடித்திருக்கிறார் என்கிறார்கள். அதிதி பேட்டிகளில் பேசும் விதமும் பலரையும் கவர்ந்திருக்கிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நான் பெரிய தலைவர் ரசிகையாக்கும் என்று கூறி ரஜினி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிட்டார் அதிதி. இந்நிலையில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று அதிதியிடம் கேட்கப்பட்டது. அவர் நிச்சயம் நயன்தாராவின் பெயரை சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அவரோ, சமந்தா தான் பிடிக்கும் என்று கூறிவிட்டார். அதை கேட்ட சமந்தா ரசிகர்களோ, எங்கள் ஆதரவு உங்களுக்கு தான் அதிதி என்கிறார்கள்.
சமந்தா தான் ஒரு முன்னணி நடிகையாக இருந்தாலும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அந்த பாடல் வீடியோ சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

Aditi Shankar: வாரிசு என்பதால் வாய்ப்பு வருதா?: அதிதி ஷங்கரின் நச் பதில்

அதனால் சமந்தாவை போன்று அதிதியும் குத்தாட்டம் போடுவாரா என்கிறார்கள் ரசிகர்கள். அதிதி சூப்பராக டான்ஸ் ஆடுகிறார். அதனால் குத்தாட்டம் போடுவது அவருக்கு கடினமாக இருக்காது என்கிறார்கள்.

இதற்கிடையே விருமனை அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார் அதிதி என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்