ஆப்நகரம்

Seema Raja : தெலுங்கில் வெளியாகும் ‘சீமராஜா’!

சிவகார்த்திகேயன் & சமந்தா நடிப்பில் வெளியான ‘சீமராஜா’ தற்போது தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.

Samayam Tamil 1 Feb 2019, 2:42 pm
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சீமராஜா’. இந்தக் கூட்டணி ஏற்கெனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களில் இணைந்திருந்தது. மூன்றாவதாக இந்த கூட்டணி மூலம் வெளியான படம் ‘சீமராஜா’.
Samayam Tamil seemaraja


இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், வழக்கமான பாணியில் இருந்து மாறி ஒரு சரித்திர கெட்டப்பிலும் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தாவும் நடித்துள்ளார். மேலும் படத்தில் சூரி, நெப்போலியன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்தார்.

இந்தபடம் தற்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 8-ம் தேதி ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ‘சீமராஜா’ என்ற அதே பெயரிலேயே வெளியிடுகிறார்கள். நடிகை சமந்தாவிற்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால் அவர் போட்டோவை போஸ்டர்களில் முதன்மைப்படுத்தி விளம்பரங்களை செய்து வருகின்றனர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்