ஆப்நகரம்

படம் வெளியான ஒரு வாரத்திற்கு அடுத்தப் படத்தைத் தொடங்கிய சீனு ராமசாமி!

‘கண்ணே கலைமானே’ படம் வெளியாகி ஒரு வாரம் ஆவதற்கு முன்னரே தன்னுடை அடுத்தப் படத்தை தொடங்கி விட்டார் இயக்குனர் சீனு ராமசாமி.

Samayam Tamil 1 Mar 2019, 6:15 pm
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘கண்ணே கலைமானே’. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி ஒரு வாரம் மட்டுமே ஆன நினைத்தால் அடுத்த படம் குறித்து அறிவித்திருக்கிறார்.
Samayam Tamil seenu-ramasamy


ஏற்கனவே சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடெக்ஷன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் ஒரு படம் வெளியான பின்பு சிறிது ஓய்வுகூட எடுக்காமல் தனது அடுத்தப் படத்தைத் தொடங்கி விட்டார் இயக்குனர் சீனு ராமசாமி. இந்த படத்தை ‘டயம்லைன் சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிப்பார்க்கப்படுகிறது

அடுத்த செய்தி

டிரெண்டிங்