ஆப்நகரம்

செக்க சிவந்த வானம் பாடல்கள் 5ஆம் தேதி வெளியீடு!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் படத்தின் பாடல்களை வருகிற 5ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 2 Sep 2018, 4:33 pm
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் படத்தின் பாடல்களை வருகிற 5ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Samayam Tamil Sekka-Sevantha-Vaanam-Movie-HD-Stills
செக்க சிவந்த வானம் பாடல்கள் 5ஆம் தேதி வெளியீடு


மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, பிரகாஷ் ராஜ் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் செக்க சிவந்த வானம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை, மெட்ராஸ் டாக்கீஸ், லைகா நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது.

செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் படத்தின் டிரெய்லரை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதுவரை 7.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் செக்க சிவந்த வானம் படத்தின் டிரெய்லரை இணையதளத்தில் பார்த்து ரசித்துள்ளனர். இந்நிலையில், வருகிற 5ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்