ஆப்நகரம்

மீண்டும் செல்வராகவன் - யுவன் கூட்டணி

டைரக்டர் செல்வராகவனும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் மீண்டும் இணையவுள்ளார்கள்.

TNN 24 Apr 2016, 4:38 pm
டைரக்டர் செல்வராகவனும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் மீண்டும் இணையவுள்ளார்கள்.
Samayam Tamil selvaragavan again joins hands with yuvan
மீண்டும் செல்வராகவன் - யுவன் கூட்டணி


இறுதியில் ‘புதுப்பேட்டை’ படத்தோடு பந்தம் விட்டுப் பிரிந்த செல்வராகவனும், யுவனும் ஒன்றிணைகிறார்கள். கௌதம் தயாரிப்பில், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். படம் முடியும் நிலையில் உள்ளது.

எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடித்துவரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக இருந்தது. படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சந்தோஷ் நாராயணனை படத்திலிருந்து நீக்கிவிட்டு யுவனை ஒப்பந்தம் செய்துள்ளனர். கபாலி உள்ளிட்ட பட வேலைகளில் பிஸியாக இருப்பதால் சந்தோஷ் நாராயணனுக்கு பதில் யுவன் சங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்