ஆப்நகரம்

ரிலீஸ் தேதி தள்ளி தள்ளிப் போகும் படம் ‘செக போத ஆகாதே’ !

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘செம போத ஆகாதே’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Jun 2018, 6:37 pm
அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘செம போத ஆகாதே’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
Samayam Tamil sema_botha_aagatha


பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘செம போத ஆகாதே’. படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக மிஷ்டி, அனைகா சொட்டி என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். மேலும், படத்தில் ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை நடிகர் அதர்வா ‘கிக்காஸ்’ எண்டர்டெயின்மெண்ட் மூலம் அவரே தயாரித்துள்ளார்.

இந்நிலையில் 3 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது. கடந்த வாரம் படத்தை வருகிற ஜூன் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. தற்போது, மீண்டும் படத்தின் ரிலீஸை ஜூன் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்