ஆப்நகரம்

எங்கிருந்து எவனோ வர்றானாம்... செந்தில் - ராஜலட்சுமியின் கொரோனா பாடல் !

செந்தில் கணேஷ், ராஜலட்சுமி பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Samayam Tamil 27 Mar 2020, 12:56 pm
நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ், அவரது மனைவி ராஜலட்சுமி இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பலரும் இந்த பாடலை கேட்டு ரசித்து வருகின்றனர். மேலும் அருமையாக இருப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Samayam Tamil senthil ganesh


கொரோனா பற்றிய விழிப்புணர்வு பாடல்


எங்கிருந்து எவனோ வர்றானாம்.. எல்லாரையும் வந்து கொல்றானாம். கத்தியை தீட்டு புள்ள. நானா அவனா பாத்துடுவோம் என செந்தில் கணேஷ் குரலில் ஆரம்பிக்கிறது பாடல். அதற்கு பதில் சொல்லும் விதத்தில் ராஜலட்சுமி பாடுவார்.

எங்கிருந்தோ வர்றது கொரோனா வைரஸ் கிருமி கொரோனா புத்தியை மட்டும் தீட்டு மச்சான் அவனானு பாத்திடலாம் என்று ராஜலட்சுமி பாடுவது, கொரோனாவை புத்தியால்தான் விரட்ட முடியும். நீங்கள் அறிவை உபயோகித்து அதற்கான வழியை தேட வேண்டும் என்பது போல இருக்கும்.

கிராமத்தில் நாட்டுப்புற பாடல்கள் பாடி, ஓரளவுக்கு அறிமுகமாகி இருந்த இவர்கள் இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழக அளவில் பிரபலமாகினர். அவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டனர் இந்த தம்பதியினர். இதன் மூலம் சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பும் இவர்களைத் தேடி வந்தது.

செந்தில் கணேஷ், ராஜலட்சுமி பாடி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான பாடலான சின்ன மச்சான் பாடலை பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 படத்துக்காக பயன்படுத்தினர். பின்னர் சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன், விஸ்வாசம், குண்டு, சூர்யாவின் சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார் செந்தில்கணேஷ்.

இந்நிலையில் தான், இவர்கள் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பாடலாக இந்த பாடலை பாடி வெளியிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்