ஆப்நகரம்

கேரளாவில் ஆகஸ்ட் 22ல் வெளியாகும் நயன்தாரா படம்!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கோலமாவு கோகிலா’ படம் கேரளாவில் இம்மாதம் 22ம் தேதி வெளியாகவுள்ளது.

Samayam Tamil 17 Aug 2018, 6:14 pm
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கோலமாவு கோகிலா’ படம் கேரளாவில் இம்மாதம் 22ம் தேதி வெளியாகவுள்ளது.
Samayam Tamil kolamavu-kokila


நடிகை நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்துள்ள படம் ‘கோலமாவு கோகிலா’. இந்தப் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்பு அடைந்துள்ளது. எனவே கேரளாவில் மட்டும் இந்த படம் ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்