ஆப்நகரம்

ஒருவரின் கையில் சிக்கிய பேட்ட மற்றும் விஸ்வாசம்!

ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை செவன்த் சென்ஸ் திரைப்படட்டிஸ் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Samayam Tamil 3 Jan 2019, 3:59 pm
ரஜினியின் ‘பேட்ட’ படமும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் வெளிநாட்டு வியாபாரமும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்த நிலையில் விஸ்வாசம்’ திரைப்படத்தின் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் வெளியீடு உரிமையை செவன்த் சென்ஸ் திரைப்படட்டிஸ் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த நிலையில் இதே செவன்த் சென்ஸ் திரைப்படட்டிஸ் நிறுவனம் தான் ‘பேட்ட’ திரைப்படத்தின் ரஷ்யா, உக்ரைன் நாடுகளின் வெளியீடு உரிமையையும் கைப்பற்றியுள்ளது.
Samayam Tamil viswasam-petta


இதனால் ஏற்கனவே ‘விஸ்வாசம்’ படத்திற்கு புக் செய்திருந்த ஒருசில திரையரங்குகளை ‘பேட்ட’ படத்திற்கு கைமாற்றி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் இரண்டு படங்களையும் ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் பிரமாண்டமாக வெளியீடு செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்