ஆப்நகரம்

இளம் நடிகைகள் பாலியல் தொல்லை அனுபவிப்பது உண்மை : நடிகைகள் சங்கம்

பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், கேரளா சினிமா வட்டாரத்தில் அடுத்த புயல் கிளம்பியுள்ளது .

TNN 7 Jul 2017, 6:47 pm
பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், கேரளா சினிமா வட்டாரத்தில் அடுத்த புயல் கிளம்பியுள்ளது .
Samayam Tamil sexual assault for young actress in malayalam cinema
இளம் நடிகைகள் பாலியல் தொல்லை அனுபவிப்பது உண்மை : நடிகைகள் சங்கம்


பிரபல மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக போலீஸார் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரள நடிகர் சங்கத்தின் (அம்மா) 23வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் இன்னசெண்ட், “மலையாள சினிமா உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதில்லை” என கூறியிருந்தார்.

இன்னசெண்ட்டின் பேச்சுக்கு பதிலளித்து பேசியுள்ள கேரளா நடிகைகள் கூட்டமைப்பு சார்பில் ஃபேஸ்புக்கில் பரபரப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “இன்னசெண்ட் பேசியிருப்பது முற்றிலும் தவறான கருத்து. ஆதிக்கம் படைத்தவர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, இளம் நடிகைகளையும், வாய்ப்பு தேடி வரும் புதுமுக நடிகைககளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவது மறுக்க முடியாது.

பூனை கண்களை மூடிக்கொண்டால், உலகமே இருண்டு விடும் என நினைக்கும், அது போல சினிமா துறையில் எதுவும் நடக்கவில்லை என இன்னசெண்ட் பொய்யாக பேசுவது நம்ப வேண்டாம்.” என பதிவிட்டுள்ளனர்.

இந்த பதிவால் கேரளா நடிகர்கள் சங்கத்திற்கும், நடிகைகள் கூட்டமைப்பிற்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்