ஆப்நகரம்

Shalini Ajith: மகளுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்திய ஷாலினி அஜித்: தீயாய் பரவும் புகைப்படம்.!

ஷாலினி அஜித் தன்னுடைய மகள் அனோஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 4 Jan 2023, 8:08 am
நடிகர் அஜித்தின் 'துணிவு' படத்திற்கான புரமோஷன் பணிகள் படு ஜோராக நடந்து வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இந்தப்படத்தின் வெளியீட்டிற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Ajith Kumar Family
Ajith Kumar Family


எச்.வினோத், அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள 'துணிவு' படத்தினை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 'வலிமை' படத்தினை போல் இல்லாமல் இந்தப்படம் முழுக்க முழுக்க வினோத் பாணியில் உருவாகியிருக்கும் என்ற ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

'துணிவு' படத்தில் அஜித்தின் கேரக்டர் பற்றிய அறிவிப்பு வெளியாகாத நிலையில் கடந்த சனிக்கிழமை டிரெய்லர் வெளியானது. டிரெய்லரில் டான்ஸ், வில்லத்தனமான சிரிப்பு என வேற லெவலில் அதகளம் செய்துள்ளார் அஜித். டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது 'துணிவு' டிரெய்லர்.

அண்மையில் நடிகர் அஜித் குமாரின் மனைவி நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை பகிரும் ஷாலினி, சில தினங்களுக்கு முன்பாக புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதில் நடிகர் அஜித் குமார், மகள் அனோஷ்கா ஆகியோருடன் ஷாலினி இருந்தார். மேலும் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் எடுத்த புகைப்படங்களையும் ஷாலினி அஜித்குமார் வெளியிட்டு இருந்தார்.

Thalapathy 67: 'தளபதி 67' ட்வீட்டால் அல்லல்படும் பிரபல நடிகர்: இதென்னய்யா சோதனை.!

இந்நிலையில் தனது மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷாலினி பகிர்ந்துள்ள பதிவு இணையத்தை கலக்கி வருகிறது. அதில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டார்லிங்" என‌ பதிவிட்டுள்ளார். மேலும் மகளைக் கட்டிப்பிடிக்கும், முத்தம் கொடுக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Suriya 42: அடேங்கப்பா.. கோடிகளை குவிக்கும் 'சூர்யா 42': ரிலீசுக்கு முன்பே மாஸ் சம்பவம்.!

'துணிவு' படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், சிபி சக்கரவர்த்தி, அமீர், பாவனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் 'துணிவு' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்