ஆப்நகரம்

போனில் கொலை மிரட்டல் .. மீரா மிதுன் பற்றி ஷாலு ஷம்மு போலீசில் புகார்

நடிகை ஷாலு ஷம்மு மீரா மிதுன் பற்றி போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

Samayam Tamil 14 Aug 2020, 5:47 pm
கடந்த சில வாரங்களாக நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சையான விஷயங்களை ட்விட்டரில் பேசி வருகிறார். நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட பலர் பற்றி அவர் மோசமாக பேச வருகிறார். அவருக்கு இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல சினிமா துறை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
Samayam Tamil Meera Mithun and Shalu Shammu


இந்நிலையில் தற்போது மீரா மிதுனுக்கு எதிராக பேசியதால் தனது போனில் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து அழைப்புகள் வருகிறது என நடிகை ஷாலு ஷம்மு போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்து இருந்தவர் தான் ஷாலு ஷம்மு. தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஒருவராகவும் ஷாலு இருக்கிறார். விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் சூர்யா மனைவி நடிகை ஜோதிகா அகியோர் பற்றி மீரா மிதுன் தவறாக பேசியதால் அவருக்கு ஷாலு ஷம்மு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பேசி இருக்கிறார். அதற்கு மீரா மிதுனும் இவரை விமர்சித்து பதில் அளித்திருக்கிறார்.

அதற்கு பிறகு ஷாலு ஷம்முவின் போனுக்கு சில அழைப்புகள் வர துவங்கி இருக்கிறது. அதில் பேசியவர்கள் 'நீ மீரா மிதுன் பற்றி தொடர்ந்து பேசினால் உன்னை கொலை செய்யவும் தயங்க மாட்டோம்' என கூறி மிரட்டி இருக்கிறார்கள். அசிங்கமாக பேசி அசிட் அடித்து விடுவோம் என்று கூட மிரட்டுகிறார்கள். இப்படி தனக்கு பத்துக்கும் அதிகமான போன் கால்கள் வந்ததால் அது பற்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்க முடிவெடுத்து வந்து இருப்பதாக ஷாலு ஷம்மு கூறி இருக்கிறார்.

"இதை லீகலாக எடுத்து சென்றால் தான் அவருக்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வைக்க முடியும். மேலும் என் புகைப்படம், வயது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு நான் தவறான ஒரு பெண் என்பது போல சில தப்பான இணையதளங்களில் பதிவேற்றி இருக்கிறார்கள். தற்போது மீரா மிதுன் பெயர் கெட்டுவிட்டது. அவரை பற்றி கேள்வி கேட்டு அவருக்கு கிடைக்க வேண்டிய புகழ் எனக்கு வந்துவிடுமோ என்று தான் இப்படி செய்கிறார். எனக்கு தற்போது நல்ல வளர்ச்சி இருக்கிறது. அதை கெடுக்க வேண்டும் என்பது தான் அவரது எண்ணம்" என ஷாலு கூறி இருக்கிறார்.

மேலும் தான் மீரா மிதுனை தொடர்பு கொண்டு பேச முயற்சிக்கவில்லை என்றும், நான் அப்படி செய்தால் இந்த விஷயம் பற்றியும் ட்விட்டரில் பதிவிட்டு பப்ளிசிட்டி தேட முயற்சி செய்வார் என்றும் ஷாலு குறிப்பிட்டுள்ளார். இந்த சர்ச்சைகள் ஏற்பட்ட பிறகு மீரா மிதுனை இரண்டு விளம்பரங்களில் இருந்து நீக்கிவிட்டு அதற்கு பதில் ஷாலுவை தான் ஒப்பந்தம் செய்து இருக்கிறார்களாம். அதனால் என் பெயரை கெடுக்க பல விஷயங்களை செய்து வருகிறார் மீரா மிதுன் என அவர் கூறியுள்ளார்.

மேலும் தொடர்நது பேசிய ஷாலு ஷம்மு தனது போலீஸ் புகாரில் கொலை மிரட்டல் மற்றும் defamation ஆகியவற்றிற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டிருப்பதாக கூறி உள்ளார்.

போலீஸ் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்