ஆப்நகரம்

அக்‌ஷய் குமாரை பாராட்டிய ஷங்கர்!

டைரக்டர் ஷங்கர் ‘2.0’ படத்தில் நடிக்கும் நடிகர் அக்ஷய குமாரை பாராட்டியுள்ளார்.

TOI Contributor 23 Mar 2016, 5:15 pm
டைரக்டர் ஷங்கர் ‘2.0’ படத்தில் நடிக்கும் நடிகர் அக்ஷய குமாரை பாராட்டியுள்ளார்.
Samayam Tamil shankar appreciates akshay kumar
அக்‌ஷய் குமாரை பாராட்டிய ஷங்கர்!

டைரக்டர் ஷங்கர் தற்போது ரஜினியை வைத்து ‘2.0’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடித்து வருகிறார். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தில்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. இங்கு ரஜினியும், அக்‌ஷய் குமாரும் மோதும் சண்டைக் காட்சியை படமாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில், வில்லன் நடிகர் அக்‌ஷய் குமாரின் நடிப்பை சங்கர் பாராட்டியுள்ளார். அக்‌ஷய் குமார் பற்றி சங்கர் கூறும்போது, ‘‘அக்‌ஷய் குமாருடன் பணிபுரிவது சந்தோஷமாக உள்ளது. அவர் ஒரு நேர்மையான மனிதர் மட்டுமல்ல, கடின உழைப்பாளி. நல்ல ஒத்துழைப்பை கொடுக்கிறார்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்