ஆப்நகரம்

அம்போனு நிற்கும் இந்தியன் 2: வாரிசு நடிகரை வைத்து முதல்வன் 2 படத்தை இயக்கும் ஷங்கர்?

ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கப் போகும் படம் முதல்வன் 2 என்று தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. இருப்பினும் இதை ஷங்கர் உறுதி செய்யும் வரை நம்பமுடியாது.

Samayam Tamil 30 Mar 2021, 10:35 am
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil shankar to helm mudhalvan 2 with ram charan
அம்போனு நிற்கும் இந்தியன் 2: வாரிசு நடிகரை வைத்து முதல்வன் 2 படத்தை இயக்கும் ஷங்கர்?


ராம் சரண்

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணை வைத்து ஷங்கர் ஒரு படத்தை இயக்குகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுமாம். இந்நிலையில் ராம் சரணுக்காக ஷங்கர் தயார் செய்து வைத்திருப்பது முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. கோலிவுட்டின் முன்னணி நடிகர்களிடம் முதல்வன் 2 படம் குறித்து ஷங்கர் பேசியபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லையாம். இதையடுத்தே கதை தான்யா ஹீரோ என்று ராம் சரணை வைத்து படம் எடுக்க கிளம்பிவிட்டாராம்.

முதல்வன் 2

ராம் சரண், ஷங்கர் இணையும் படம் முதல்வன் 2 என்று கூறப்பட்டாலும் இதை அவர்கள் உறுதி செய்யும் வரை நம்ப முடியாது. ஷங்கர் படங்கள் குறித்து அவ்வப்போது வதந்தி கிளம்பி அடங்குவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கொரோனா வைரஸ் பிரச்சனை எல்லாம் ஏற்படுவதற்கு முன்பு உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் ஷங்கர். அந்த படத்தின் ஷூட்டிங் துவங்கியதில் இருந்தே அவ்வப்போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டது.

இந்தியன் 2

அடிக்கடி படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் சென்னையில் இருக்கும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு நடந்தது. அப்பொழுது கிரேன் விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் பலியாகினர், 10 பேர் காயம் அடைந்தனர். விபத்தை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு இதுவரை துவங்கவில்லை. இந்நிலையில் தான் ஷங்கர் தன் அடுத்த பட வேலையை துவங்கிவிட்டார்.

கமல் ஹாசன்

இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்குவதாக இல்லை என்பதால் கமலும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவிருக்கிறார். அவர் தற்போது சட்டசபை தேர்தல் வேலையில் பிசியாக இருக்கிறார். அதனால் தேர்தல் வேலை முடிந்த பிறகு விக்ரம் படப்பிடிப்பை துவங்கவிருக்கிறார்களாம். இந்நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்