ஆப்நகரம்

இதுக்கு எதுக்கு பொண்டாட்டி பர்மிஷன்? நான் இதைத்தானே கேட்டேன்: சாந்தனு

நடிகர் சாந்தனு மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் ட்விட்டரில் நகைச்சுவையாக உரையாடியுள்ளனர்.

Samayam Tamil 25 Jun 2020, 9:20 am
தற்போது கொரோனா லாக் டவுன் நேரத்தில் சினிமா துறை முற்றிலும் முடங்கியுள்ளது. அதற்கு காரணம் எந்த படங்களின் ஷூட்டிங்கும் கடந்த 3 மாதங்களாக நடக்கவே இல்லை. ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டு கூட வெளியில் வரமுடியாத சூழ்நிலையில் தான் அனைவரும் இருந்தனர். இந்த நேரத்தில் சினிமா நட்சத்திரங்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை வீட்டிலிருந்தே செய்து வருகின்றனர். அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியிடவும் அவர்கள் தவறுவதில்லை. இவ்வாறு அவர்கள் வெளியிடும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு அதிகளவில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.
Samayam Tamil Shanthanu and Kiki


அந்த வகையில் முன்னணி நடிகர் விஷ்ணு விஷால் தான் வீட்டிலேயே இருக்கும் நேரத்தில் தனது அப்பாவுக்கு முடி வெட்டி விட்டுள்ளார். அந்த புகைப்படங்களை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது..

"நம்பிக்கையற்ற நேரங்களில்.. நம்பிக்கையற்ற விஷயங்கள்.. அப்பாவின் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆகிவிட்டேன். எல்லா வேலையும் மிகவும் சுலபம் என்பது போல தெரியும், அதை நீங்களே செய்யும் வரை" என விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார்.

விஷ்ணு இப்படி தனது அப்பாவுக்கு முடி வெட்டி விட்ட புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வேகமாக வைரல் ஆனது. இந்த புகைப்படங்களை பார்த்த பிரபல நடிகர் சாந்தனு விஷ்ணுவிஷாலிடம் தனக்கும் முடி வெட்டி விடும் படி கேட்டுள்ளார். "மச்சான் எனக்கு தற்போது மிகவும் அவசியமாக ஒரு கட் தேவைப்படுகிறது. தயவுசெய்து உதவி செய்" என கேட்டுள்ளார்.

அதற்கு பதில் கூறிய விஷ்ணு விஷால் "ஹாஹா.. மச்சி எப்போ வேணும்னாலும் ரெடி.. உன் பொண்டாட்டி கிகி இடம் பர்மிஷன் வாங்கி விடு" என கூறி இருந்தார்.


விஷ்ணு இப்படி கூறியதை பார்த்த சாந்தனு என்ன பதில் சொன்னார் தெரியுமா?

"இதுக்கு எதுக்கு பர்மிஷன்? நான் கட் தானே கேட்டேன் கட்டிங் இல்லையே" என தெரிவித்தார். அதற்கு விஷ்ணு ஸ்மைலிகளை தான் பதிலாக பதிவிட்டுள்ளார்.


சாந்தனு மற்றும் மனைவி கிகி இருவரும் இந்த கொரோனா லாக் டவுன் நேரத்தில் ஜோடியாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் இணைந்து இயக்கி நடித்து வெளியிட்டிருந்த குறும்படம் ஒன்றும் மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

சாந்தனு தற்போது மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் அவர் நடித்துள்ளார். படத்தில் வரும் ஒரு முக்கிய ட்விட்ஸ்டுக்கு இவரது கதாப்பாத்திரம் தான் காரணமாக இருக்கும் என முன்பு ஒரு பேட்டியில் சாந்தனு குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு ஆல்பம் பாடலிலும் சாந்தனு நடனம் ஆடி இருந்தார். ஒரு சான்ஸ் கொடு பொண்ணு என்ற அந்தப் பாடலில் மேகா ஆகாஷ் மற்றும் மெட்ராஸ் கலையரசன் ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காதலன் காதலி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட காதலன் சார்பில் அவனது நண்பன், காதலியிடம் பேசுவது போல உருவாக்கப்பட்டு இருந்தது அந்த பாடல்.

மேலும் சமீபத்தில் ஃபாதர்ஸ் டே ஸ்பெஷலாக தனது யூடியூப் சேனலில் சாந்தனு அவரது அப்பா பாக்யராஜை பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்