ஆப்நகரம்

Vijay மாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அல்ல மாறாக கோவையில் நடக்க உள்ளது என்று சாந்தனு பாக்யராஜ் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த இந்த அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Samayam Tamil 23 Feb 2020, 1:35 pm
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அல்ல மாறாக கோவையில் நடக்க உள்ளது என்று சாந்தனு பாக்யராஜ் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த இந்த அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Samayam Tamil shanthanu bhagyaraj gives amazing update about vijay starrer master
Vijay மாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா


மாஸ்டர் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் மாஸ்டர். அந்த படத்தின் அப்டேட் கேட்டு விஜய் ரசிகர்கள் அவ்வப்போது சாந்தனுவை நச்சரிப்பார்கள். விஜய் ரசிகர்கள் தன்னை பாடாய் படுத்துவதை அவர் ஜாலியாக மீம் எல்லாம் போடுவார். இந்நிலையில் தான் சாந்தனு மெகா அப்டேட் கொடுத்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா

கோவையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் சாந்தனு கலந்து கொண்டு ஒரு குட்டி கதை பாடலை பாடி அசத்தினார். அந்த மேடையில், கூடிய சீக்கிரம் வெயிட்டா வருகிறோம் இசை வெளியீட்டுக்கு என்று தெரிவித்தார். அப்படி என்றால் விஜய் சென்னைக்கு பதில் கோவைக்கு சென்று குட்டிக் கதை சொல்லப் போறாருங்கணா.

விஜய்யின் குட்டிக் கதை

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்த தன்னை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றது, தன் வீட்டில் இரண்டு நாட்கள் சோதனை நடத்தியது குறித்து இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு குட்டிக் கதை சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சாந்தனு சொல்வதை பார்த்தால் இசை வெளியீட்டு விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது போன்று.

குட்டி ஸ்டோரி

முன்னதாக ஒரு குட்டிக் கதை பாடல் வெளியானபோது அதில் விஜய் ஏதாவது பன்ச் வைத்திருப்பார் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். காரணம் ஒரு குட்டிக் கதை பாடல் முழுக்க அறிவுரையாக இருந்தது. இருப்பினும் விஜய் பாடியதால் ரசிகர்களுக்கு அந்த பாடல் மிகவும் பிடித்துவிட்டது. குறிப்பாக குட்டீஸ்களுக்கு குட்டி ஸ்டோரி ரொம்ப, ரொம்ப பிடித்துவிட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்