ஆப்நகரம்

சாஹோ படத்தில் இரு வேடங்களில் ஸ்ரத்தா கபூர்!

நடிகை ஸ்ரத்தா கபூர் இரு வேடங்களில் ‘சாஹோ’ படத்தில் நடிக்கிறார்.

TNN 18 Sep 2017, 4:37 pm
நடிகை ஸ்ரத்தா கபூர் இரு வேடங்களில் ‘சாஹோ’ படத்தில் நடிக்கிறார்.
Samayam Tamil sharaddha kapoor playing dual role in saaho
சாஹோ படத்தில் இரு வேடங்களில் ஸ்ரத்தா கபூர்!


நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி2’ படத்தை அடுத்து தற்போது நடித்து வரும் படம் ‘சாஹோ’ இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. முதன்முறையாக இந்தப் படத்தின் சண்டைக் காட்சிக்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. சண்டைக்காட்சி முடிந்து தற்போது வசன காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

‘சாஹோ’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார் .மேலும், இந்தப் படத்தில் ஸ்ரத்தா கபூர் இரு வேடங்களில் நடிக்கிறார். ஒன்றில் பிரபாஸின் காதல் நாயகியாக நடிக்கிறாராம்.மற்றொரு வேடத்தில் ஆக்ஷன் நாயகியாக நடிக்கிறாராம். . முதலில் ஸ்ரத்தா கபூருக்கு தெலுங்கு பேச பயிற்சி கொடுத்தவர்கள், இப்போது சண்டை பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.
மேலும், ‘சாஹோ’ படத்தில் மந்த்ரா பேடி, நீல்நிதின் முகேஷ் ஆகியோர் நெகடீவ் ரோல்களில் நடிக்கின்றனர்..

அடுத்த செய்தி

டிரெண்டிங்