ஆப்நகரம்

தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் ‘ஷாஸாம்’!

ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஹாலிவுட்டில் உருவாகியுள்ள ‘ஷாஸாம்’ படம் ஏப்ரல் 5ம் தேதி தமிழில் வெளியாகவுள்ளது.

Samayam Tamil 29 Mar 2019, 12:48 pm
ஹாலிவுட்டில் சூப்பர் கதாநாயகன் கதாபாத்திரம்களுக்கும் படங்களுக்கும் பஞ்சமில்லை. இப்போது புதிய சூப்பர் கதாநாயகனாக ஹாலிவுட்டில் உருவாகியுள்ள படம் ஷாஸாம். பேய் கதையான அனபெல்லே படத்தை இயக்கிய டேவிட் சான்ட்பெர்க் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
Samayam Tamil sahazm


எல்லோருக்குள்ளும் ஒரு சூப்பர் கதாநாயகன் இருக்கிறான். அதை சந்தர்ப்பம் எப்படி வெளியே கொண்டு விடுகிறது என்பதுதான் இந்த படத்தின் சிறப்பம்சம்.

படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அக்வாமேன் படத்துக்கு ஆக்‌ஷன் காட்சிகளை அமைத்த டீம், இதிலும் பணியாற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வரும் ஏப்ரல் 5ம் தேதி படம் திரைக்கு வர உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்