ஆப்நகரம்

"அவர் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை":மலையாள நடிகர் லால் பேட்டி..!

காரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட மலையாள நடிகை,இன்னும் அந்த சம்பவத்திலிருந்து மீண்டு வரவில்லை என நடிகர் லால் தெரிவித்துள்ளார்.

TNN 20 Feb 2017, 8:12 pm
காரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட மலையாள நடிகை,இன்னும் அந்த சம்பவத்திலிருந்து மீண்டு வரவில்லை என நடிகர் லால் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil she is still in shock for that incidentsays malayalam actor lal
"அவர் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை":மலையாள நடிகர் லால் பேட்டி..!


இது குறித்து மலையாள ஊடகங்களுக்கு நடிகரும்,இயக்குநருமான லால் அளித்துள்ள பேட்டியில்,”சம்பவம் நடந்த அன்று அருகிலிருந்த எனது வீட்டுக்கு வந்து,தனக்கு நேர்ந்த கொடுமைகளை அந்த நடிகை கூறியதும் நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்.சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக,கேரள டி.ஜி.பியை தொடர்பு கொண்டு,நடந்த சம்பவங்களை விளக்கினேன்.இதனைத் தொடர்ந்து உடனடியாக காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டனர்.

ஆனால் மறுநாள் ஊடகங்களில் இந்த சம்பவம் குறித்து வேறு மாதிரியாக செய்திகள் வெளியானதால்,அந்த நடிகை மிகவும் மனமுடைந்து போனார்.புகாரை வாபஸ் வாங்கிவிடலாமா?என்று கூட யோசித்தார்.ஆனால் அவருக்கு தைரியம் சொன்ன டி.ஜி.பி,இது போல பல சம்பவங்கள் நடந்திருந்தாலும்,நீங்கள் தான் முதன்முறையாக காவல்துறையில் புகார் அளித்துள்ளீர்கள் என தெரிவித்தார்.

ஆனாலும் தற்போது வரை அவரால் இயல்பு நிலைக்கு மாற முடியவில்லை.இந்த சம்பவத்தால் அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.அவர் மீண்டு வர இன்னும் கொஞ்சம் நாட்களாகலாம்.”என தெரிவித்துள்ளார்.

"She is still in shock for that incident",says Malayalam Actor Lal

அடுத்த செய்தி

டிரெண்டிங்