ஆப்நகரம்

தர்ஷனை அலேக்கா தூக்கிய ஷெரின்: சாண்டியை கட்டி வைத்து அடித்த பாய்ஸ்

பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ஷெரின் தர்ஷனை தூக்கியுள்ளார்.

Samayam Tamil 3 Nov 2019, 4:59 pm
பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது. நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கியுள்ளார். அவர் தர்ஷனை மேடைக்கு அழைக்க அரங்கில் இருந்த பெண் பார்வையாளர்கள் பயங்கரமாக வரவேற்பு கொடுத்தார்கள்.
Samayam Tamil tharshan


பிக் பாஸ் நிகழ்ச்சி போன்றே இதிலும் டாஸ்க் கொடுத்துள்ளனர். மேடைக்கு வந்த தர்ஷனை அலேக்கா அதுவும் பெண் போட்டியாளர் தான் தூக்க வேண்டும் என்றார் கோபிநாத். அதற்கு தர்ஷனோ என்னை எப்படி தூக்க முடியும், கீழே போட்டுவிடுவார்கள் என்றார்.

பிக் பாஸ் கொண்டாட்டம்: 3 பேர் மிஸ்ஸிங், கவினை குத்திக்காட்டிய கஸ்தூரி, லைட்டா கொந்தளித்த வனிதா

பின்னர், என்னை தூக்க முடியும் என்றால் அது எங்க அக்கா வனிதாவால் தான் முடியும் என்று தர்ஷன் கூறினார். உடனே மேடைக்கு வந்த வனிதா நிஜமாகவே தர்ஷனை தூக்கிவிட்டார்.



வனிதாவை அடுத்து யாரை அழைக்கலாம் என்று கோபிநாத் பார்வையாளர்களை பார்த்து கேட்க அவர்களோ ஷெரின் பெயரை கூறினார்கள். இதையடுத்து தயங்கியபடி வந்த ஷெரின் தர்ஷனை தூக்காமல் முதலில் கட்டிப்பிடித்தார். பின்னர் பெயருக்கு லைட்டா தூக்கினார். பில்டிங் மாதிரி இருக்கிறார், எப்படி தூக்க முடியும் என்று கேட்டார் ஷெரின்.

அதை பார்த்த கோபிநாத்தோ ஒழுங்கா தூக்குங்கம்மா என்று கூற தர்ஷனை அலேக்கா தூக்கினார் ஷெரின். இதை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்களோ, இப்ப கூட காதல் ஸ்க்ரிப்ட்டா, திருந்தவே மாட்டீங்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சூசகமாக போஸ்ட் போட்ட சனம்: தர்ஷனுடன் பிரேக்கப்பா?

பின்னர் பாட்ஷா படத்தில் ரஜினியை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சியை செய்து காட்டினார்கள். சாண்டியை கம்பத்தில் கட்டி வைக்க மோகன் வைத்யா, சேரன், தர்ஷன், முகென் ஆகியோர் அடித்தனர். கவின் மட்டும் சாண்டியை அடிக்காமல் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

அதன் பிறகு பாய்ஸ் கேங் சாண்டியை தூக்கிச் சென்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்