ஆப்நகரம்

Beast:படம் பார்க்கல, அந்த சீன்ல எக்ஸ்பிரஷனே இல்ல: பீஸ்ட் நடிகரே இப்படி சொல்லிட்டாரே


பீஸ்ட் படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஷைன் டாம் சாக்கோவை விஜய் ரசிகர்கள் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 20 Jun 2022, 12:26 pm
பீஸ்ட் படம் குறித்து அதில் நடித்த ஷைன் டாம் சாக்கோ தெரிவித்திருப்பது விஜய் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.
Samayam Tamil shine tom chackos interview about beast doesnt go well with vijay fans
Beast:படம் பார்க்கல, அந்த சீன்ல எக்ஸ்பிரஷனே இல்ல: பீஸ்ட் நடிகரே இப்படி சொல்லிட்டாரே


பீஸ்ட்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்த பீஸ்ட் படத்தில் மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ நடித்திருந்தார். படம் குறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசியதை பார்த்த விஜய் ரசிகர்கள் கோபம் அடைந்திருக்கிார்கள்.

படம்

பீஸ்ட் படம் பார்க்கவில்லை ஆனால் ட்ரோல்ஸ் பார்த்தேன் என ஷைன் டாம் சாக்கோ தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் விஜய் டாமை அலேக்கா தூக்கிச் செல்வது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் தான் விஜய் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

Twitter-T H A N G A M

எக்ஸ்பிரஷன்

ஒரு வெயிட்டான பொருளை தூக்கும்போது அதன் எடையை தெரிவிக்க எக்ஸ்பிரஷன் காட்ட வேண்டும். ஆனால் படத்தில் காட்டவில்லை. அதனால் தான் மக்கள் கிண்டல் செய்கிறார்கள் என்று ஷைன் டாம் சாக்கோ தெரிவித்துள்ளார்.

விஜய்

பீஸ்ட் படத்தில் இரண்டு பேரை விஜய் ஈஸியாக தூக்கிச் செல்வார். அதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் வந்த நிலையில் பீஸ்ட் படத்தில் நடித்த ஒருவரே இப்படி கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. தளபதி முகத்தில் எக்ஸ்பிரஷன் இல்லை என்று நீங்கள் எப்படி சொல்லலாம் என விஜய் ரசிகர்கள் டாமை விளாசுகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்