ஆப்நகரம்

சூப்பர் ஸ்டார், மாப்பிள்ளையால் பின் வாங்கும் அகில உலக சூப்பர் ஸ்டார்?

பொங்கல் ரேஸில் இருந்து அகில உலக சூப்பர் ஸ்டார் விலகிக் கொண்டுள்ளாராம்.

Samayam Tamil 3 Jan 2020, 1:39 pm
ஹோசிமின் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள சுமோ படத்தை பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியிட முடிவு செய்தனர். ஆனால் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 9ம் தேதி ரஜினிகாந்தின் தர்பாரும், 16ம் தேதி தனுஷின் பட்டாஸும் ரிலீஸாக உள்ளன.
Samayam Tamil shiva


ரஜினி, தனுஷ் படங்கள் வரும் நேரத்தில் சுமோவும் வந்தால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று படக்குழு கருதுகிறதாம். இதையடுத்து சுமோ படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டுள்ளார்களாம்.

வணக்கம் சென்னை படத்தை அடுத்து சுமோவில் சிவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் ப்ரியா ஆனந்த். இந்த படத்தில் யோஷினோரி தஷிரோ ஜப்பானிய சுமோ வீரராக நடித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது.

அஜித், விஜய்யிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம்: சொல்கிறார் ப்ரித்விராஜ்

காமெடி படமான சுமோவை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலுடன் சேர்ந்து விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். சிவாவே பயங்கரமாக காமெடி பண்ணுவார். இந்நிலையில் சுமோவில் யோகி பாபு, விடிவி கணேஷ் வேறு உள்ளார்கள். அதனால் காமெடிக்கு குறைவே இருக்காது எனலாம்.

சுமோ படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். தர்பார் பட ரிலீஸால் தான் பட்டாஸ் பட வெளியீட்டு தேதியும் மாற்றப்பட்டது. இந்நிலையில் சுமோ ரிலீஸ் தேதியும் மாற்றப்பட்டுள்ளது.

மஹா போஸ்டரில் கெத்து காட்டும் சிம்பு: அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்...

முன்னதாக கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரஜினியின் பேட்ட படம் ரிலீஸானது. அந்த படத்துடன் அஜித்தின் விஸ்வாசம் படமும் சேர்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்