ஆப்நகரம்

மலர் டீச்சரின் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!

மலர் டீச்சரின் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!

TOI Contributor 25 Nov 2016, 6:00 pm
பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாப்பாத்திரத்தின் மூலமாக இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் சாய் பல்லவி. இவர் தமிழ் சினிமாவில் எப்போது நடிப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலில் இருந்தனர். அஜித்துடன் நடிக்கிறார், விஜய்யுடன் நடிக்கிறார் என்று வதந்திகள் வெளியானதே தவிர சாய் பல்லவியை தமிழ் படங்களில் நடிக்க எவரும் அணுகவில்லை. இந்நிலையில் நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் அவருடன் சாய் பல்லவி இணைகிறார் என்ற செய்தி வெளியாகி மலர் டீச்சரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் அதிலும் ஒரு அதிர்ச்சி தகவல் உள்ளது.
Samayam Tamil shocking news for premam sai pallavi fans
மலர் டீச்சரின் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!


அடுத்ததாக ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் ஹாலிவுட்டில் வெளியான “டோன்ட் பிரீத்” (Don’t Breath) என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். கதைப்படி கதையின் நாயகனுக்கு 60 வயது இருக்கும். அதனால் விக்ரம் சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் நடிக்க உள்ளார். அதனால் சாய் பல்லவி விக்ரமின் ஜோடியாக நடிக்கவில்லை எனும் அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்