ஆப்நகரம்

இடத்தை லாக் செய்த 'தானா சேர்ந்த கூட்டம்'

'நானும் ரவுடி தான்' பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இடத்தை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.

TNN 5 Nov 2016, 2:02 am
சென்னை: 'நானும் ரவுடி தான்' பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இடத்தை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.
Samayam Tamil shooting locations finalized for thaana serndha koottam
இடத்தை லாக் செய்த 'தானா சேர்ந்த கூட்டம்'


சமீபத்தில் பூஜையுடன் துவங்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு வருகிற நவ.9ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் அடுத்த சில மாதங்களுக்கு படமாகவிருக்கிறது.

'புதிய முகம்' பட நாயகி சுரேஷ் மேனன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி உடன் பல புதுமுகங்கள் நடிக்கவுள்ளனர். சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 'சிங்கம் 3' மீசையை விடுத்து புதுமையான மாறுபட்ட தோற்றத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்